விவசாயத்துறை அமைச்சகம்
வாரணாசியில் பிஎம் கிசான் திட்டத்தின் 17-வது தவணையைப் பிரதமர் நாளை விடுவிக்கிறார்
Posted On:
17 JUN 2024 2:30PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி 2024, ஜூன் 18 அன்று வாரணாசியில் பிஎம் கிசான் திட்டத்தின் 17வது தவணையை விடுவிக்கிறார். இதில் 9.26 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் ரூ.20,000 கோடிக்கும் அதிகமான பலன்களைப் பெறுவார்கள். வேளாண் தோழிகளாகப் பயிற்சி பெற்ற 30,000-க்கும் அதிகமான சுய உதவிக் குழுக்களுக்கு இணை விரிவாக்கப் பணியாளராகப் பணியாற்றுவதற்கான சான்றிதழ்களையும் பிரதமர் வழங்குவார்.
இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய வேளாண் அமைச்சர் திரு. சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் பல்வேறு மாநில அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள். நாடு முழுவதும் உள்ள 732 வேளாண் அறிவியல் மையங்கள், 1 லட்சத்துக்கும் அதிகமான தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், 5 லட்சம் பொதுச் சேவை மையங்கள் மற்றும் 2.5 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 50 வேளாண் வளர்ச்சி மையங்களில், சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, இதில் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் பங்கேற்பார்கள். இந்த மையங்களில், பல மத்திய அமைச்சர்களும் விவசாயிகளுடன் கலந்துரையாடுவார்கள்.
மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான், ஜூன் 15 அன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தி, இந்தியப் பொருளாதாரத்தில் விவசாயத்தின் முக்கியப் பங்கு மற்றும் விவசாயிகளுக்கு பிரதமர் மோடியின் அசைக்க முடியாத ஆதரவை வலியுறுத்தினார். விவசாயத்திற்கு எப்போதும் பிரதமர் முன்னுரிமை அளித்து வருகிறார் என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2025877
***
AD/SMB/DL
(Release ID: 2025958)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Nepali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam