நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் 2024, ஜூன் 24 முதல் ஜூலை 3 வரை நடைபெறும்

Posted On: 12 JUN 2024 1:42PM by PIB Chennai

18 வது மக்களவையின் முதல் அமர்வு 2024, ஜூன் 24 முதல்  ஜூலை  3 வரை நடைபெறும். இந்தக் கூட்டத்தொடரில் மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம், மக்களவைத் தலைவர் தேர்வு, குடியரசுத் தலைவர் உரை மற்றும் அது குறித்த விவாதங்கள் நடைபெறும்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ள பதிவில் இந்த விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார். மாநிலங்களவையின் 264-வது கூட்டத்தொடர் 2024, ஜூன் 27-ம் தேதி தொடங்கி ஜூலை 3-ம் தேதி நிறைவடையும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

***

(Release ID: 2024630)

SG/IR/AG/RR



(Release ID: 2024759) Visitor Counter : 94