ரெயில்வே அமைச்சகம்
மத்திய ரயில்வே, தகவல், ஒலிபரப்பு, மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக திரு. அஸ்வினி வைஷ்ணவ் பொறுப்பேற்றார்
प्रविष्टि तिथि:
11 JUN 2024 3:25PM by PIB Chennai
மத்திய ரயில்வே, தகவல், ஒலிபரப்பு, மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக திரு. அஸ்வினி வைஷ்ணவ் ரயில் பவனில் இன்று பொறுப்பேற்றார். ரயில்வே வாரியத் தலைவர், தலைமைச் செயல் அதிகாரி திருமதி ஜெயவர்மா சின்ஹா, ரயில்வே உயர் அதிகாரிகள் ஆகியோர் அவரை வரவேற்றனர். பராமரிப்புப் பணியாளர்கள், ரயில்வேயின் பிற அதிகாரிகளும் பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு வைஷ்ணவ், பிரதமர் மோடியின் நீண்டகால தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதில் தனது திடமான உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டினார். இந்திய ரயில்வே பொது மக்களுக்கு குறைவான கட்டணத்தில் வசதியான போக்குவரத்து முறையாக இருப்பதை உறுதி செய்வதற்கான தனது விருப்பதை நிறைவேற்றுவதற்காக இப்பொறுப்பை பிரதமர் தன்னிடம் ஒப்படைத்துள்ளதாக கூறினார்.
திரு அஸ்வினி வைஷ்ணவ் (பிறப்பு 1970) ஒடிசாவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஆவார். முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், சுந்தர்கர், பாலசோர், கட்டாக் மாவட்ட ஆட்சியராக மக்களுக்கு சேவை செய்தார். கான்பூர் ஐஐடியில் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டமும், வார்ட்டனில் எம்பிஏ பட்டமும் பெற்றவர் ஆவார்.
***
SRI/IR/AG/RR/DL
(रिलीज़ आईडी: 2024238)
आगंतुक पटल : 152
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam