தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சராக டாக்டர் மன்சுக் மாண்டவியா பொறுப்பேற்றார்

Posted On: 11 JUN 2024 2:24PM by PIB Chennai

மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை  அமைச்சராக டாக்டர் மன்சுக் மாண்டவியா  இன்று புதுதில்லியில் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பையும் கொண்டுள்ளார்.

அமைச்சர் டாக்டர் மாண்டவியாவை  அமைச்சகத்தின் செயலாளர் திருமதி சுமிதா தாவ்ராவும், மூத்த அதிகாரிகளும் வரவேற்றனர்.

முந்தைய அரசில் டாக்டர் மாண்டவியா, மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை, ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக இருந்தார்.

குஜராத் மாநிலம் போர்பந்தர் மக்களவைத் தொகுதியிலிருந்து டாக்டர் மாண்டவியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஏற்கனவே, இவர் 2012 முதல் 2024 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். மேலும் 2002 முதல் 2007 வரை பலிதானா தொகுதியிலிருந்து குஜராத் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.

 

***

(Release ID: 2024004)

SMB/RS/RR



(Release ID: 2024062) Visitor Counter : 42