எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய மின்துறை அமைச்சராக திரு மனோகர் லால் பொறுப்பேற்றார்

प्रविष्टि तिथि: 11 JUN 2024 11:38AM by PIB Chennai

மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக திரு மனோகர் லால் இன்று  பொறுப்பேற்று கொண்டார். மின்துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு பங்கஜ் அகர்வால், அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் அமைச்சரை வரவேற்றனர்.

முன்னாள் மின்துறை அமைச்சர் திரு ராஜ்குமார் சிங் அவரை அன்புடன் வரவேற்றார். மத்திய மின்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

மத்திய அமைச்சருக்கு மின்சார அமைச்சகத்தின் நிலை குறித்து உயர் அதிகாரிகள் விளக்கமளித்தனர். அமைச்சராகப் பொறுப்பேற்ற பின், நாட்டின் மின்சார விநியோக நிலை குறித்த ஆய்வுக் கூட்டத்தையும் அவர் நடத்தினார்.

***

(Release ID: 2023931)

SMB/IR/AG/RR


(रिलीज़ आईडी: 2023965) आगंतुक पटल : 159
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam