பிரதமர் அலுவலகம்
வரலாற்று சிறப்பு மிக்க வகையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிபர் மேக்ரோன் வாழ்த்து
இருநாட்டு நட்புறவு 2047 திட்டத்தின்படி ஒருங்கிணைந்து தொடர்ந்து செயல்பட இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்
80-வது ஆண்டு தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து
எதிர் வரும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளை சிறப்பாக நடத்த பிரதமர் வாழ்த்து
Posted On:
06 JUN 2024 2:23PM by PIB Chennai
பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரோன் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். தொடர்ந்து 3-வது முறையாக வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றதற்காக பிரதமருக்கு அதிபர் மேக்ரோன் வாழ்த்துத் தெரிவித்தார். அதற்கு அதிபர் மேக்ரோனிடம் நன்றி தெரிவித்துக் கொண்ட பிரதமர், இந்தியா – பிரான்ஸ் இடையேயான வலுவான, நம்பிக்கை கொண்ட உத்திசார்ந்த கூட்டாண்மையை வரும் காலங்களில் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார்.
இருநாடுகளுக்கு இடையேயான உறவு 2047-ன் படி திட்டமிடப்பட்ட உறுதிப்பாடுகளை நிறைவேற்ற தொடர்ந்து இணைந்து பணியாற்றுவதற்கு இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். வரலாற்று சிறப்புமிக்க 80-வது ஆண்டு தினத்தையொட்டி அதிபர் மேக்ரோனுக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார்.
எதிர்வரும் பாரீஸ் ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளை சிறப்பாக நடத்தவும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார். தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் இருநாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
------
(Release ID: 2023080)
AD/IR/KPG/RR
(Release ID: 2023172)
Visitor Counter : 94
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam