நிதி அமைச்சகம்

மத்திய கலால் வரைவு மசோதா 2024 வரைவு குறித்த கருத்துக்களை, 2024 ஜூன் 26-ம் தேதிக்குள் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் தீர்வு வாரியம் வரவேற்கிறது

Posted On: 04 JUN 2024 2:36PM by PIB Chennai

மத்திய கலால் வரைவு மசோதா 2024 வரைவு குறித்த கருத்துக்களை, 2024 ஜூன் 26-ம் தேதிக்குள் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் தீர்வு வாரியம் வரவேற்கிறது. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் தீர்வு வாரியம் மத்தியக் கலால் மசோதா 2024-ஐ வடிவமைத்துள்ளது. இது ஒரு முறை இயற்றப்பட்டுவிட்டால் மத்திய கலால் சட்டம் 1944-கிற்கு மாற்றாகிவிடும். எளிதாக வர்த்தகம் செய்வதை ஊக்குவிக்கவும், பழைய சிக்கலான விதிமுறைகளை நீக்கிவிட்டு, விரிவான நவீன மத்திய கலால் சட்டத்தை இயற்றுவது இந்த மசோதாவின் நோக்கமாகும். இந்த மசோதாவில், 12 அத்தியாயங்களும் 114 பிரிவுகளும், 2 பட்டியல்களும் இடம் பெற்றுள்ளன. இது குறித்தக் கருத்துக்களை cx.stwing[at]gov[dot]in என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தெரிவிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2022728

----- 

AD/IR/KPG/RR



(Release ID: 2022734) Visitor Counter : 64