தேர்தல் ஆணையம்

8 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தலில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு

Posted On: 20 MAY 2024 9:00PM by PIB Chennai

2024, மே 20 (இன்று) காலை 7 மணிக்கு தொடங்கிய பொதுத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவில் இரவு 7.45 மணி நிலவரப்படி 57.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இன்று வாக்குப்பதிவு நடந்த மாநிலங்களின் பல பகுதிகளில் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் அதிக அளவில் திரண்டனர். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தாலும், ஏராளமான வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் வரிசையில் காத்திருந்தனர்.

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லாவில் இரவு 7.45 மணி நிலவரப்படி 54.49% வாக்குப்பதிவு முற்றிலும் அமைதியாக நடைபெற்றது. பீகார், ஜம்மு-காஷ்மீர், லடாக், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்  வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 695 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சுமூகமாகவும், அமைதியாகவும் நடைபெற்றது. தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் திரு ஞானேஷ் குமார்,  திரு சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தேர்தல் நடைமுறைகளை  உன்னிப்பாகக் கண்காணித்து தேவையான வழிகாட்டுதல்களை  வெளியிட்டனர். வாக்காளர்கள் அச்சமோ மிரட்டலோ இன்றி வாக்களிப்பதற்கு உகந்த சூழலை உருவாக்கும் வகையில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆங்காங்கே வெப்பமான நிலைமைகளைத் தவிர வானிலை பெரும்பாலும் சாதாரணமாக இருந்தது.

தற்காலிகமான  புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் வாக்குப்பதிவு புள்ளிவிவரங்கள், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் வாக்குப்பதிவு செயலியில் கிடைக்கும்.

***

(Release ID: 2021160)

SMB/BR/RR



(Release ID: 2021180) Visitor Counter : 19