நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2024 ஏப்ரல் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிகமாக ரூ.2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல்

ஜிஎஸ்டி வரி வசூல் ரூ. 2 லட்சம் கோடி என்னும் மைல் கல்லைத் தாண்டி சாதனை

ஒட்டுமொத்த வருவாயில் ஆண்டுக்கு ஆண்டு 12.4 சதவீதம் அதிகம்

நிகர வருவாய் (ரீபண்ட்டுக்கு பின்னர்) ரூ.1.92 லட்சம் கோடியாக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டில் 17.1 சதவீதம் அதிகம்

Posted On: 01 MAY 2024 11:55AM by PIB Chennai

2024 ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) ஒட்டுமொத்த வசூல் சாதனை அளவாக ரூ.2.10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. உள்நாட்டு பரிவர்த்தனையின் அதிகரிப்பு காரணமாக, இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட, 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது. திருப்பி செலுத்தியதற்கு பின்னர் நிகர ஜிஎஸ்டி வருவாய் ஏப்ரல் மாதத்தில் ரூ.1.92 லட்சம் கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, 17. 1 சதவீதம் அதிகமாகும்.

ஏப்ரல் மாத வசூல் அம்சங்கள்:

மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி) ரூ. 43,846 கோடி

மாநில ஜிஎஸ்டி (எஸ்ஜிஎஸ்டி) ரூ.53,538 கோடி

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) ரூ. 99,623 கோடி (இறக்குமதி பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ. 37,826 கோடி உட்பட)

செஸ் ரூ.13,260 கோடி (இறக்குமதி பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ. 1008 கோடி உட்பட)

அரசுகளுக்கு இடையிலான  தீர்வு:

ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் வசூலிக்கப்பட்ட தொகையில் மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.50,307 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.95, 138 கோடியும் வழங்கியுள்ளது.

வழக்கமான தீர்வுக்கு பின்னர் இது, மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.94,153 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.95,138 கோடியும் மொத்த வருவாயாக உள்ளது.

2024-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழ்நாட்டில்  12,210 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது. இது 11,559 கோடி என்னும்  2023-ம் ஆண்டு வசூலை விட, 6 சதவீதம் அதிகமாகும்.

புதுச்சேரியை பொருத்தவரை இது 13 சதவீதம் அதிகரித்து, 247 கோடியாக இருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2019262

***

PKV/RS/RR


(Release ID: 2019268) Visitor Counter : 270