தேர்தல் ஆணையம்

இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான அறிவிக்கையை இந்தியத் தேர்தல் ஆணையம் நாளை வெளியிடுகிறது. வேட்புமனுத் தாக்கல் உடனடியாக தொடங்குகிறது

Posted On: 27 MAR 2024 2:30PM by PIB Chennai

2024 பொதுத் தேர்தலின் இரண்டாம் கட்ட வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. மக்களவை 2024 பொதுத் தேர்தலில் தேர்தல் நடைபெறவுள்ள 12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளுக்கான அரசிதழ் அறிக்கை 28.03.2024 அன்று வெளியிடப்படும். 88 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு 26.04.2024 அன்று நடைபெறும். முதல் கட்டத்திற்கான அரசிதழ் அறிவிப்பில் மணிப்பூருக்கு வெளியே உள்ள பகுதிகளின் தேர்தலுக்கான அறிவிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் மற்றொரு பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மக்களவையின் 15  சட்டப்பேரவை தொகுதிகளில் 19.04.2024 (முதல் கட்டம்) அன்று தேர்தல் நடைபெறும். 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 26.04.2024 (இரண்டாம் கட்டம்) அன்று தேர்தல் நடைபெறும்.

அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இரண்டாம் கட்டத்தேர்தலில் இடம்பெற்றுள்ளன.

12 மாநிலங்களில் நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய ஏப்ரல் 6 அன்று கடைசி நாளாகும். ஜம்மு-காஷ்மீர் தவிர, 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வேட்புமனு மீதான பரிசீலனை ஏப்ரல் 5 அன்று நடைபெறும். ஜம்மு-காஷ்மீரில் வேட்புமனு மீதான பரிசீலனை ஏப்ரல் 6 அன்று நடைபெறும்.

***

PKV/IR/RS/KRS



(Release ID: 2016508) Visitor Counter : 108