பிரதமர் அலுவலகம்
ஆசிய மகளிர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
18 FEB 2024 9:39PM by PIB Chennai
ஆசிய மகளிர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
விளையாட்டில் சிறந்து விளங்கும் மகளிர் சக்திக்கு அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இது ஒரு வரலாற்று சாதனை!
ஆசிய மகளிர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகள். அவர்களின் வெற்றி பல வளரும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்.
நமது மகளிர் சக்தி பல்வேறு விளையாட்டுகளில் தனித்துவமாக சிறந்து விளங்குகிறது.”
***
(Release ID: 2006957)
AD/PLM/RR
(रिलीज़ आईडी: 2016045)
आगंतुक पटल : 131
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam