பிரதமர் அலுவலகம்
புதுதில்லியில் நடைபெற்ற ரிபப்ளிக் தொலைக்காட்சியின் உச்சிமாநாடு 2024-இல் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
07 MAR 2024 11:58PM by PIB Chennai
அனைவருக்கும் வணக்கம்!
இந்த சிறப்பு உச்சிமாநாட்டிற்காக ரிபப்ளிக் தொலைக்காட்சியின் குழுவினரை நான் வாழ்த்துகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த தசாப்தம் பாரதத்திற்கு சொந்தமானது என்று நான் கூறியபோது, மக்கள் இதை வெறும் அரசியல் அறிக்கை என்று நினைத்தார்கள், அரசியல்வாதிகள் தொடர்ந்து இதுபோன்ற விஷயங்களைக் கூறுகிறார்கள். ஆனால் இது உண்மை, இந்த தசாப்தம் பாரதத்திற்கு சொந்தமானது என்பதை இன்று உலகம் ஒப்புக் கொண்டுள்ளது. "பாரதம் – அடுத்த தசாப்தம்" என்ற விவாதத்தைத் தொடங்கி நீங்கள் மேலும் ஒரு அடி முன்னெடுத்துச் சென்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 'வளர்ந்த இந்தியா’ கனவுகளை நிறைவேற்ற இந்த தசாப்தம் முக்கியமானது.
நண்பர்களே,
நாம் தற்போது இருக்கும் தசாப்தம், கடந்து செல்லும் தசாப்தம், சுதந்திர பாரதத்தின் மிக முக்கியமான தசாப்தம் என்று நான் நினைக்கிறேன். மனரீதியான தடையை உடைப்பது மிகவும் அவசியம். இந்த தசாப்தம் பாரதத்தின் திறன்களைக் கொண்டு பாரதத்தின் கனவுகளை நிறைவேற்றுவதாக இருக்கும். பாரதத்தின் திறன்கள் மூலம் பாரதத்தின் கனவுகள் நனவாகும் என்பதை நான் மிகுந்த தீவிரத்துடன் கூறுகிறேன் . அடுத்த பத்தாண்டுகள் தொடங்குவதற்கு முன்பு, பாரதம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நாம் காண்போம். ஒவ்வொரு இந்தியருக்கும் வீடு, கழிப்பறை, எரிவாயு, மின்சாரம், தண்ணீர், இணையம் மற்றும் சாலைகள் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கும். இந்த தசாப்தம் நவீன உள்கட்டமைப்பு, உலகத் தரம் வாய்ந்த விரைவுச் சாலைகள், அதிவேக ரயில்கள் கட்டுமானம் மற்றும் பாரதத்தில் நாடு தழுவிய நீர்வழி அமைப்பு பற்றியதாக இருக்கும். இந்த தசாப்தத்தில், பாரதம் தனது முதல் புல்லட் ரயிலைப் பெறும். இந்த பத்தாண்டுகளில், பாரதத்தில் சரக்கு வழித்தடங்கள் முழுமையாக செயல்படும். இந்த தசாப்தத்தில், இந்தியாவின் முக்கிய நகரங்கள் மெட்ரோ அல்லது நமோ பாரத் ரயில்கள் மூலம் இணைக்கப்படும்.
நண்பர்களே,
சுதந்திரத்திற்குப் பிந்தைய தசாப்தங்களில், பாரதத்தை தவறான திசையில் இட்டுச் சென்றதன் மூலம் அதன் பெரும்பகுதி நேரம் வீணடிக்கப்பட்டது. ஒரே குடும்பத்தை மையப்படுத்தியதால், நாட்டின் வளர்ச்சி குவிந்தது. நாம் இழந்த காலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள். எனவே, இதை அடைய முன்னெப்போதும் இல்லாத அளவிலும், வேகத்திலும் நாம் பணியாற்ற வேண்டும். மூன்றாவது முறையாக பாஜக 370 இடங்களை வெல்லும் என்று நீங்கள் அனைவரும் விவாதித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் எனது முழு கவனமும் நாட்டின் வளர்ச்சியின் வேகத்தையும் அளவையும் அதிகரிப்பதில் உள்ளது. 75 நாட்கள் பற்றிய கணக்கை மட்டும் கொடுத்தால் ரிபப்ளிக் நேயர்களே ஆச்சரியப்படுவார்கள். நாட்டில் எந்த வேகத்தில் அபிவிருத்திப் பணிகள் நடைபெறுகின்றன என்பதை இங்கே சிலர் அறிந்திருக்க வேண்டும். கடந்த 75 நாட்களில், சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நான் தொடங்கி வைத்தேன். இது 110 பில்லியன் டாலர்களுக்கும் அதிகம். இது உலகின் பல நாடுகளின் வருடாந்திர செலவுகளை விட அதிகம், வெறும் 75 நாட்களில் நவீன உள்கட்டமைப்பில் இதை விட அதிகமாக முதலீடு செய்துள்ளோம்.
கடந்த 75 நாட்களில், நாட்டில் 7 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. நான்கு மருத்துவம் மற்றும் செவிலியர் கல்லூரிகள், ஆறு தேசிய ஆராய்ச்சி ஆய்வகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 3 ஐஐஎம்கள், 10 ஐஐடிகள் மற்றும் 5 என்ஐடிகள் தொடர்பான நிரந்தர வளாகங்கள் அல்லது வசதிகளின் தொடக்க மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மேலும், 3 இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகங்கள், 2 இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகங்கள், 10 மத்திய நிறுவனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. விண்வெளி உள்கட்டமைப்பு தொடர்பான ரூ.1800 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த 75 நாட்களில் மட்டும், 54 மின் திட்டங்களின் திறப்பு அல்லது அடிக்கல் நாட்டு விழாக்கள் நடந்துள்ளன. கக்ரபார் அணுமின் நிலையத்தின் இரண்டு புதிய அணு உலைகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. கல்பாக்கத்தில் இந்தியாவின் முதலாவது உள்நாட்டு வேக ஈனுலையில் "கோர் லோடிங்" தொடங்கப்பட்டுள்ளது, இது மிகப் பெரிய புரட்சிகரமான திட்டம். தெலுங்கானாவில் 1600 மெகாவாட் அனல் மின் நிலைய திறப்பு விழா நடைபெற்றது. ஜார்க்கண்டில் 1300 மெகாவாட் அனல் மின் நிலைய திறப்பு விழா நடைபெற்றது. உத்தரப் பிரதேசத்தில் 1600 மெகாவாட் அனல் மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 300 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில், உத்தரப் பிரதேசத்தில் அல்ட்ரா மெகா புதுப்பிக்கத்தக்க பூங்காவுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. இமாச்சலப் பிரதேசத்தில் நீர்மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், நாட்டின் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் செல் கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மீரட்-சிம்பவாலி மின் வழித்தடங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலம் கொப்பலில் காற்றாலை மின் இணைப்பு திறப்பு விழா நடைபெற்றது.
மிக்க நன்றி.
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
***
ANU/AD/BS/DL
(Release ID: 2015294)
Visitor Counter : 56
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam