பிரதமர் அலுவலகம்

பூடான் பிரதமரை பிரதமர் சந்தித்தார்


2024 பிப்ரவரியில் பதவியேற்ற பிறகு, இந்தியாவுக்கு முதல் வெளிநாட்டு பயணமாக வந்துள்ள பிரதமர் ஷெரிங் டோப்கேவை பிரதமர் மோடி வரவேற்றார்

சிறப்பான மற்றும் தனித்துவமான இருதரப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதி செய்தனர்

பூடான் மக்களின் வளர்ச்சியில் இந்தியா நம்பகமான, நம்பிக்கைக்குரிய, மதிப்புமிக்க பங்குதாரர் என்று பிரதமர் ஷெரிங் டோப்கே கூறினார்

அடுத்த வாரம் பூடான் செல்வதற்கான அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்


Posted On: 15 MAR 2024 10:22AM by PIB Chennai

புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று பூடான் பிரதமர் திரு தாஷோ ஷெரிங் டோப்கேயை சந்தித்தார்.

பிரதமர் ஷெரிங் டோப்கே 2024 பிப்ரவரியில் பதவியேற்ற பின்னர் தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ளார்.

உள்கட்டமைப்பு மேம்பாடு, இணைப்பு, எரிசக்தி, நீர்மின்சக்தி ஒத்துழைப்பு, இருநாட்டு மக்களுக்கு இடையேயான பரிமாற்றங்கள் மற்றும் வளர்ச்சி ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு பங்களிப்பின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். சிறப்பான மற்றும் தனித்துவமான இந்தியா-பூட்டான் நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்களது உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் உறுதி செய்தனர்.

பூட்டானின் வளர்ச்சி முன்னுரிமைகளில் நம்பகமான மற்றும் மதிப்புமிக்க கூட்டாளியாக இந்தியா செயல்பட்டு வருவதற்கு பூடான் பிரதமர் தனது ஆழ்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.

பூடான் மன்னரின் சார்பில், பிரதமர் ஷெரிங் டோப்கே, அடுத்த வாரம் பூடானுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை பிரதமர் ஏற்றுக்கொண்டார்.

***

SM/BS/AG/KV

 



(Release ID: 2014845) Visitor Counter : 69