பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

முதலாவது தேசியப் படைப்பாளர்கள் விருதை மார்ச் 8 பிரதமர் நாளை வழங்குகிறார்

கதை சொல்லல், சமூக மாற்ற ஆலோசனை ஆதரவு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, கல்வி, கேமிங் உள்ளிட்ட களங்களில் சிறப்பையும், தாக்கத்தையும் அங்கீகரிக்கும் முயற்சியாக விருது இருக்கும்

விருது மகத்தான பொது ஈடுபாட்டைக் கண்டது; 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் மற்றும் சுமார் 10 லட்சம் வாக்குகள் பதிவாகின

இருபது பிரிவுகளில் விருது வழங்கப்படும்

Posted On: 07 MAR 2024 4:28PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை காலை 10:30 மணியளவில் புதுதில்லி பாரத மண்டபத்தில் முதல் தேசிய படைப்பாளர்கள் விருதை வழங்குவார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றுவார்.

 

தேசிய படைப்பாளிகள் விருது என்பது கதை சொல்லல்சமூக மாற்ற ஆதரவுசுற்றுச்சூழல் நிலைத்தன்மைகல்விகேமிங் உள்ளிட்ட களங்களில் சிறப்பையும், தாக்கத்தையும் அங்கீகரிக்கும் ஒரு முயற்சியாகும். நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த படைப்பாற்றலைப் பயன்படுத்துவதற்கான ஒரு தளமாக இந்த விருது கருதப்படுகிறது.

 

தேசிய படைப்பாளர் விருது முன்மாதிரியான பொது ஈடுபாட்டைக் கண்டுள்ளது. முதல் சுற்றில், 20 வெவ்வேறு பிரிவுகளில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் பெறப்பட்டன. அதைத் தொடர்ந்துவாக்கெடுப்பு சுற்றில்பல்வேறு விருது பிரிவுகளில் டிஜிட்டல் படைப்பாளர்களுக்கு சுமார் 10 லட்சம் வாக்குகள் பதிவாகின. இதைத் தொடர்ந்துமூன்று சர்வதேச படைப்பாளிகள் உட்பட 23 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மக்களின் தேர்வை இந்த விருது உண்மையிலேயே பிரதிபலிக்கிறது என்பதற்கு இந்த அபரிமிதமான பொது ஈடுபாடு சான்றாகும்.

 

சிறந்த கதைசொல்லிக்கான விருது உட்பட இருபது பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படும்ஆண்டின் பிரபல படைப்பாளிபசுமை சாம்பியன் விருதுசமூக மாற்றத்திற்கான சிறந்த படைப்பாளிமிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் விவசாய படைப்பாளிஆண்டின் கலாச்சார தூதர்சர்வதேச படைப்பாளி விருதுசிறந்த பயண படைப்பாளி விருதுதூய்மை தூதர் விருதுநியூ இந்தியா சாம்பியன் விருதுடெக் கிரியேட்டர் விருதுஹெரிடேஜ் ஃபேஷன் ஐகான் விருதுமிகவும் படைப்பாற்றல் கொண்ட படைப்பாளி (ஆண் பெண்)உணவுப் பிரிவில் சிறந்த படைப்பாளிகல்விப் பிரிவில் சிறந்த படைப்பாளிகேமிங் பிரிவில் சிறந்த படைப்பாளிசிறந்த மைக்ரோ கிரியேட்டர்சிறந்த நானோ படைப்பாளிசிறந்த உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி படைப்பாளர் ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்படும்.

***

(Release ID: 2012210)

PKV/AG/KRS


(Release ID: 2012267) Visitor Counter : 151