மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாடு மற்றும் தொற்றுநோய் தடுப்பு தயார் நிலைக்கான தேசிய ஒற்றைச் சுகாதார இயக்கத்தை முன்னெடுக்க நாக்பூரில் உள்ள தேசிய ஒற்றைச் சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் பதவியை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

प्रविष्टि तिथि: 29 FEB 2024 3:40PM by PIB Chennai

மனிதர், விலங்கு, தாவரம், சுற்றுச்சூழல் துறையை ஒருங்கிணைப்பதன் மூலம் ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாடு மற்றும் தொற்றுநோய் தடுப்பு தயார் நிலைக்கான தேசிய ஒற்றைச் சுகாதார இயக்கத்தை முன்னெடுக்க நாக்பூரில் உள்ள தேசிய ஒற்றைச் சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் பதவியை விஞ்ஞானி 'எச்' (ஊதிய நிலை-15) நிலையில் உருவாக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஒற்றைச் சுகாதார நிலையத்தின் இயக்குநர் பணியிடத்தை ஊதிய நிலை 15 (ரூ.1,82,000 - ரூ.2,24,100) ஆக விஞ்ஞானி 'எச்' நிலையில் உருவாக்குவதன் மூலம், ஆண்டுக்கு சுமார் ரூ.35.59 லட்சம் நிதிச் செலவு ஏற்படும். 

********

PKV/IR/AG/KRS/DL


(रिलीज़ आईडी: 2010276) आगंतुक पटल : 147
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam