பிரதமர் அலுவலகம்
"நாட்டிற்கான எனது முதல் வாக்கு" என்ற பிரச்சாரம் குறித்த செய்தியை முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களிடையே பரப்புமாறு அனைத்துத் தரப்பு மக்களையும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
27 FEB 2024 1:25PM by PIB Chennai
"நாட்டிற்கான எனது முதல் வாக்கு" என்ற பிரச்சாரம் குறித்த செய்தியை முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களிடையே பரப்புமாறு அனைத்துத் தரப்பு மக்களையும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இளம் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்த ஊக்குவிக்கவும் "நாட்டிற்கான எனது முதல் வாக்கு" என்ற பிரச்சாரம் நடந்து வருகிறது.
சமூக ஊடக 'எக்ஸ்' தளத்தில் மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர், "நாட்டிற்கான எனது முதல் வாக்கு" என்ற பாடலைப் பகிர்ந்து, அதை அனைவரும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
மத்திய அமைச்சர் பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது,
"நமது தேர்தல் செயல்முறையை இன்னும் அதிக பங்கேற்புடன் மாற்றுவோம். அனைத்து தரப்பு மக்களும் தங்கள் சொந்த பாணியில், முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களிடையே செய்தியை பரப்ப வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் - #MeraPehlaVoteDeshKeLiye!
***
ANU/PKV/IR/AG/KV
(रिलीज़ आईडी: 2009396)
आगंतुक पटल : 270
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
Kannada
,
Marathi
,
Malayalam
,
Khasi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia