பிரதமர் அலுவலகம்

"தேர்வு குறித்த உரையாடல் 2024" நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடனான கலந்துரையாடலின் போது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 29 JAN 2024 8:00PM by PIB Chennai

நமது மாணவர்களின் படைப்புகளை இப்போது நான் பார்த்தேன். அவர்கள் சில புதுமைகளைச் செய்திருக்கிறார்கள். பல்வேறு வகையான மாதிரிகளை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த மாதிரிகளில் தேசிய கல்விக் கொள்கையை இணைக்க அவர்கள் முயற்சித்துள்ளனர். நீர், நிலம், வானம், விண்வெளி, செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் நாட்டின் எதிர்காலத் தலைமுறையினர் என்ன நினைக்கிறார்கள் என்பதையும், அவர்களிடம் என்ன தீர்வுகள் உள்ளன என்பதையும் காண எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

மன அழுத்தத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று சொல்ல முடியாது; எனவே, எந்தவிதமான அழுத்தத்தையும் சமாளிக்கும் திறனை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். நாம் வெறுமனே உட்கார்ந்திருக்கக்கூடாது. அழுத்தம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி. மன அழுத்தம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்ற உண்மையை நாம் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். எனவே, நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு வெப்பமான பகுதியில் வசிக்கும்போது, 3-4 நாட்களுக்குப் பின் குளிர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் மனதளவில் உங்களைத் தயார்படுத்திக் கொள்கிறீர்கள். அப்படி தயார்படுத்திக் கொள்ளும்போது, அதனைப் படிப்படியாக எளிதாக உணர முடிகிறது. நீங்கள் உங்கள் மனதில் அந்த எண்ணத்தை உருவாக்கியதால் இது நிகழ்கிறது. அதேபோல், இந்த அழுத்தத்தை, இந்த சூழ்நிலையை நமது சொந்த வழியில் வெல்ல நாம் உறுதியேற்க வேண்டும்.

 

 அழுத்தத்தின் வகைகளையும் கருத்தில் கொள்ள வேண்டியது மற்றொரு விஷயமாகும். காலை 4 மணிக்கு எழுந்திருக்க முடிவு செய்வது, இரவு 11 மணி வரை படிப்பது, அல்லது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாடத்திற்குரிய கேள்விகளுக்குத் தீர்வுகாண ஒரு இலக்கை நிர்ணயிப்பது போன்ற அழுத்தம் நம் மீது சுமத்தப்படுகிறது. இந்த அழுத்தத்தை நாமே அனுபவிக்கிறோம். நம் திறனை பாதிக்கும் அளவுக்கு அந்த அழுத்தத்தை நமக்குள் நீட்டிக்கக்கூடாது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். நாம் படிப்படியாக முன்னேற வேண்டும். நேற்று நான் 7 கேள்விகளுக்கு விடை தெரிந்துகொண்டேன். இன்று 8 கேள்விகளுக்கு விடை தெரிந்துகொள்ள முடிவு செய்தேன் என்று சொல்லலாம். நான் 15-ஐ இலக்காகக் கொண்டு, 7 கேள்விகளுக்கு மட்டுமே விடை தெரிந்துகொள்கிறேன் என்றால், நான் காலையில் எழுந்தவுடன், "நேற்று என்னால் அதைச் செய்ய முடியவில்லை, எனவே அதை இன்று முடிக்க வேண்டுமா?" என்று நினைத்துக்கொள்வேன். எனவே, இதுபோல நமக்கு நாமே அழுத்தத்தை உருவாக்கிக் கொள்கிறோம். இதுபோன்ற அழுத்தத்தை நாம் அறிவியல் பூர்வமாக நிர்வகிக்க முடியும். இரண்டாவதாக, பெற்றோர்களும் அழுத்தத்தை உருவாக்குகிறார்கள். "இதை ஏன் செய்யவில்லை? ஏன் தூங்கினாய்? நீ ஏன் சீக்கிரம் எழுந்திருக்கக்கூடாது? உனக்குத் தேர்வு இருக்கிறதே?" "உன்னுடைய நண்பர் என்ன செய்கிறார் என்று பார், நீயும் அதுபோல இரு" போன்ற விஷயங்களைக் கூட பெற்றோர்கள் சொல்வார்கள். சிலர் தை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். இது, மற்றொரு வகை அழுத்தம்.

 

 எனவே, மாணவர்களின் இதுபோன்ற அழுத்தங்களைத் தீர்ப்பதற்கு முழு குடும்பமும், ஆசிரியர்களுடன் சேர்ந்து சரி செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மாணவர் மட்டும் அந்தப் பிரச்சனையைப் பற்றி பேசினால் அல்லது பெற்றோர் மட்டுமே பேசினால், அது போதுமானதாக இருக்காது. குடும்பங்களுக்குள் இது தொடர்பாக விவாதங்கள் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். இதுபோன்ற சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஒவ்வொரு குடும்பமும் கலந்துரையாட வேண்டும். ஒரு முறையான கோட்பாட்டைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, நாம் படிப்படியாக விஷயங்களை உருவாக்க வேண்டும். இந்த வகையில் நாம் பரிணமித்தால், இந்தப் பிரச்சினைகளை நாம் சமாளிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். நன்றி.

***

ANU/SMB/BS/AG/KV

 



(Release ID: 2001769) Visitor Counter : 70