நிதி அமைச்சகம்
அதிகரித்து வரும் மக்கள்தொகையும் மக்கள்தொகை மாற்றங்களும் 'வளர்ச்சியடைந்த பாரதம்' இலக்குக்கு சவாலாக உள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
01 FEB 2024 12:43PM by PIB Chennai
2047-க்குள் 'வளர்ச்சியடைந்த பாரதம்', 'அமிர்த காலம்' ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நிலையில், அதிகரித்து வரும் மக்கள் தொகை, மக்கள் தொகை மாற்றங்கள் ஆகியவை 'வளர்ச்சியடைந்த பாரதம்' இலக்குகளுக்கு சவால்களாக உள்ளன என்று மத்திய நிதி, பெரு நிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது தெரிவித்தார்.
விரைவான மக்கள்தொகை அதிகரிப்பு, மக்கள் தொகை மாற்றங்களால் ஏற்படும் சவால்களை விரிவாக பரிசீலிக்க உயர் நிலைக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேற்கண்ட சவால்களை எதிர்கொள்வதற்கான பரிந்துரைகளை வழங்க இக்குழு கேட்டுக்கொள்ளப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
***
(Release ID: 2001103)
ANU/SMB/IR/AG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 2001572)
வருகையாளர் எண்ணிக்கை : 172
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam