பிரதமர் அலுவலகம்
ஜனவரி 27 அன்று கரியப்பா மைதானத்தில் நடைபெறும் தேசிய மாணவர் படை பிரதமர் பேரணியில் பிரதமர் உரையாற்றுகிறார்
प्रविष्टि तिथि:
26 JAN 2024 4:52PM by PIB Chennai
ஜனவரி 27, 2024 அன்று மாலை 4:30 மணிக்கு தில்லியில் உள்ள கரியப்பா பரேட் மைதானத்தில் நடைபெறும் வருடாந்திர என்.சி.சி பிரதமர் பேரணியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுவார்.
இந்த நிகழ்ச்சியில் அமிர்த தலைமுறையின் பங்களிப்பு மற்றும் அதிகாரமளித்தலை வெளிப்படுத்தும் 'அமிர்த காலத்தில் என்.சி.சி' என்ற கருப்பொருளில் கலாச்சார நிகழ்ச்சியும் அடங்கும். வசுதைவ குடும்பகம் என்ற உண்மையான இந்திய உணர்வுடன், 24 வெளிநாடுகளைச் சேர்ந்த 2,200-க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படை வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் இந்த ஆண்டு பேரணியில் பங்கேற்க உள்ளனர்.
சிறப்பு விருந்தினர்களாக, துடிப்பான கிராமங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துத் தலைவர்களும், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்களும் தேசிய மாணவர் படையின் பிரதமர் பேரணியில் பங்கேற்க உள்ளனர்.
************
AD/PKV/KRS
(रिलीज़ आईडी: 1999925)
आगंतुक पटल : 163
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam