பிரதமர் அலுவலகம்
தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மரியாதை
இடுகை இடப்பட்ட நாள்:
26 JAN 2024 3:37PM by PIB Chennai
தேசியத் தலைநகரில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
நமது நாட்டைத் தன்னலமின்றி பாதுகாத்தவர்களை நாம் நினைவு கூர்ந்து கௌரவிப்போம் என்று அவர் கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தினேன். நமது தேசத்தை தன்னலமின்றி பாதுகாத்தவர்களை நாம் நினைவு கூர்ந்து கௌரவிக்கிறோம். அவர்களின் தைரியமும் தியாகமும் ஒருபோதும் மறக்க முடியாதவை. அவர்களுக்கு மரியாதையுடனும் நன்றியுடனும் தலைவணங்குகிறோம், அவர்களது லட்சியங்களை நிலைநிறுத்துவதாக உறுதியளிக்கிறோம்."
***
AD/PKV/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1999922)
வருகையாளர் எண்ணிக்கை : 166
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam