மத்திய அமைச்சரவை
டிஜிட்டல் தீர்வுகளை பகிர்ந்து கொள்வதற்காக இந்தியா, கென்யா இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
18 JAN 2024 12:59PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கும், கென்யா அரசுக்கும் இடையே 2023 டிசம்பர் 5 ஆம் தேதி கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
விவரங்கள்:
இரு நாடுகளிலும் டிஜிட்டல் மாற்றத்திற்கான முன்முயற்சிகளை அமல்படுத்துவதில் நெருங்கிய ஒத்துழைப்பு, அனுபவங்களை பரிமாறிக் கொள்ளுதல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை மேம்படுத்துவதை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
செயல்பாட்டு உத்தி மற்றும் இலக்குகள்:
இருதரப்பும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாளிலிருந்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமலுக்கு வருவதுடன், 3 ஆண்டுகளுக்கு இது அமலில் இருக்கும்.
தாக்கம்:
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) துறையில் அரசுகள் மற்றும் தொழில் துறைகளுக்கு இடையே இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்.
பயன்கள்:
தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.
பின்னணி:
தகவல் தொடர்பு தொழில்நுட்ப களத்தில் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக பல நாடுகள் மற்றும் பன்னாட்டு முகமைகளுடன் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒத்துழைத்து செயல்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அதன் சக அமைப்புகள் மற்றும் முகமைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா போன்ற இந்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்முயற்சிகளுக்கிணங்க, இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளில், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை (DP) செயல்படுத்துவதில் இந்தியா தனது தலைமைத்துவத்தை நிரூபித்துள்ளது.ழ கொவிட் தொற்றுநோய் காலத்தின் போது கூட இந்தியா, பொதுமக்களுக்கு சேவைகளை வெற்றிகரமாக வழங்கியுள்ளது. இதன் விளைவாக, இந்தியாவின் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளவும், இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் பல நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன.
***
ANU/SM/PLM/RS/KV
(Release ID: 1997349)
Visitor Counter : 124
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Nepali
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam