மத்திய அமைச்சரவை
மருந்துப் பொருட்கள் ஒழுங்குமுறை துறையில் ஒத்துழைப்புக்கான இந்தியா, ஈக்வடார் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
18 JAN 2024 12:58PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசின் சுகாதாரம், குடும்பநல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, ஈக்வடார் குடியரசின் சுகாதாரக் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு தேசிய ஒழுங்குமுறை நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர் லியோபோல்டோ இஸ்கியேட்டா பெரெஸ் ஆகியோரிடையே 2023 நவம்பர் 07 அன்று மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பயன்:
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இருதரப்புக்கும் இடையே ஒழுங்குமுறை அம்சங்களை நன்கு புரிந்துகொள்ள உதவும் என்பதோடு, மருந்துப் பொருட்கள் ஒழுங்குமுறை துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும், சர்வதேச அமைப்புகளில் சிறந்த ஒருங்கிணைப்புக்கும் உதவும்.
வேலைவாய்ப்பு உருவாக்கும் திறன்:
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி உள்ள ஒழுங்குமுறை நடைமுறைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் இந்தியாவில் இருந்து மருந்துகளின் ஏற்றுமதியை அதிகரிக்கவும், அதன் விளைவாக மருந்துத் துறையில் படித்த நிபுணர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகள் உருவாகவும் உதவும்.
தற்சார்பு இந்தியா:
அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கு வழிவகுக்கும் மருந்துப் பொருட்களின் ஏற்றுமதிக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும். இது தற்சார்பு இந்தியாவை நோக்கிய ஒரு படியாக இருக்கும்.
***
ANU/PKV/IR/AG/KV
(रिलीज़ आईडी: 1997338)
आगंतुक पटल : 154
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Nepali
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam