பிரதமர் அலுவலகம்
தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்ற வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
08 JAN 2024 7:46PM by PIB Chennai
நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்ற வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது :
“நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றதற்காகப் பிரதமர் ஷேக் ஹசீனாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வாழ்த்து தெரிவித்தேன். தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்காக வங்கதேச மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வங்கதேசத்துடனான நமது நீடித்த மற்றும் மக்களை மையமாகக் கொண்ட கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.”
***
(Release ID: 1994319)
ANU/SMB/BR/RR
(रिलीज़ आईडी: 1994437)
आगंतुक पटल : 151
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam
,
Malayalam