பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜனவரி 8 முதல் 10 வரை பிரதமர் குஜராத் பயணம்


துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டின் 10 வது பதிப்பை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

உச்சிமாநாட்டின் கருப்பொருள்: எதிர்காலத்திற்கான நுழைவாயில்

துடிப்பான குஜராத் உலகளாவிய வர்த்தக கண்காட்சியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

கிஃப்ட் சிட்டியில் உலகளாவிய ஃபின்டெக் தலைமைத்துவ மன்றத்தில் முக்கிய வணிகத் தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார்

Posted On: 07 JAN 2024 3:11PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி 2023 ஜனவரி 8 முதல் 10 வரை குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

 

ஜனவரி 9 ஆம் தேதி காலை 9:30 மணியளவில், காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திருக்கு வரும் பிரதமர், அங்கு உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துகிறார், அதைத் தொடர்ந்து முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் சந்திப்பை மேற்கொள்கிறார். பிற்பகல் 3 மணியளவில், துடிப்பான குஜராத் உலகளாவிய வர்த்தக கண்காட்சியை அவர் தொடங்கி வைக்கிறார்.

ஜனவரி 10 ஆம் தேதி காலை 9:45 மணியளவில், காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு 2024 ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர், முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொள்கிறார்..

பின்னர் கிஃப்ட் சிட்டி செல்லும் பிரதமர், மாலை 5.15 மணியளவில் உலகளாவிய தலைமைத்துவ  மன்றத்தில் முக்கிய வர்த்தகத் தலைவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

2003 ஆம் ஆண்டில்  முதலமைச்சராக இருந்தபோது திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் கருத்துருவாக்கம் செய்யப்பட்ட துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சிமாநாடு இன்று அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான வணிக ஒத்துழைப்பு, அறிவுப் பகிர்வு மற்றும் உத்திப்பூர்வமான கூட்டாண்மைக்கான மிகவும் புகழ்பெற்ற உலகளாவிய மன்றங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டின் பத்தாவது பதிப்பு 2024 ஜனவரி 10 முதல் 12 வரை குஜராத்தின் காந்திநகரில் நடைபெறுகிறது. இதன் கருப்பொருள் 'எதிர்காலத்திற்கான நுழைவாயில்' என்பதாகும். இந்த பத்தாவது பதிப்பு "20 ஆண்டுகால துடிப்பான குஜராத்தை வெற்றியின் உச்சிமாநாடாக" கொண்டாடும்.

இந்த ஆண்டு உச்சிமாநாட்டில் 34 கூட்டணி நாடுகளும், 16 அமைப்புகளும் பங்கேற்க உள்ளன. மேலும், வடகிழக்கு பிராந்தியங்களில் முதலீட்டு வாய்ப்புகளை மேற்கொள்வதற்கு, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் துடிப்பான குஜராத் தளத்தைப் பயன்படுத்தும்.

தொழில்துறை 4.0, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம், நிலையான உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன், மின்சார இயக்கம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிலைத்தன்மையை நோக்கிய மாற்றம் போன்ற உலகளாவிய தொடர்புடைய தலைப்புகளில் கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை இந்த உச்சிமாநாடு நடத்துகிறது.

துடிப்பான குஜராத் உலகளாவிய வர்த்தக கண்காட்சியில், நிறுவனங்கள் உலகத் தரம் வாய்ந்த அதிநவீன தொழில்நுட்பத்திலிருந்து தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை காட்சிப்படுத்துகின்றன. இ-மொபிலிட்டி, ஸ்டார்ட் அப்கள், எம்.எஸ்.எம்.இ.க்கள், நீல பொருளாதாரம், பசுமை எரிசக்தி மற்றும் ஸ்மார்ட் உள்கட்டமைப்பு ஆகியவை வர்த்தக கண்காட்சியில் கவனம் செலுத்தும் துறைகளாகும்.

----

ANU/PKV/BS/DL


(Release ID: 1993965) Visitor Counter : 140