பிரதமர் அலுவலகம்

ஆதித்யா-எல் 1, தனது இலக்கை அடைந்ததற்குப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

Posted On: 06 JAN 2024 5:10PM by PIB Chennai

இந்தியாவின் முதல் சூரிய சூரிய ஆய்வு விண்கலமான, ஆதித்யா-எல் 1, அதன் இலக்கை அடைந்தது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (06-01-2024) மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்தச் சாதனை நமது விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்று என அவர் குறிப்பிட்டுள்ளார். மனிதகுலத்தின் நன்மைக்காக அறிவியலின் புதிய எல்லைகளைத் தொடத் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:

"இந்தியா மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலமான ஆதித்யா-எல் 1 தனது இலக்கை அடைத்துள்ளது. மிகவும் சிக்கலான மற்றும் நுணுக்கங்கள் மிகுந்த விண்வெளிப் பயணங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதில் நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும். இந்த அசாதாரண சாதனையைப் பாராட்டுவதில் நானும் தேசத்துடன் இணைகிறேன். மனிதகுலத்தின் நலனுக்காக அறிவியலின் புதிய எல்லைகளைத் தொடத் தொடர்ந்து பணியாற்றுவோம்."

----

ANU/PKV/PLM/DL



(Release ID: 1993835) Visitor Counter : 85