பிரதமர் அலுவலகம்
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
28 DEC 2023 11:06AM by PIB Chennai
தேமுதிக நிறுவனரும், பழம்பெரும் நடிகருமான திரு. விஜயகாந்த் மறைவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் அழியாத முத்திரையைப் பதித்துள்ள விஜயகாந்தின் மக்கள் சேவையை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ்த் திரைப்பட உலகின் ஜாம்பவானான இவரது வசீகர நடிப்புத்திறன் கோடிக்கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்தது. ஓர் அரசியல் தலைவராக, அவர் பொதுமக்கள் சேவையில் தீவிர அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். தமிழக அரசியல் களத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது மறைவு நிரப்பமுடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளது. எனது நெருங்கிய நண்பராக அவர் திகழ்ந்தார். பல ஆண்டுகளாக அவருடன் நான் நடத்திய உரையாடல்களை அன்புடன் நினைவுகூர்கிறேன். இந்த சோகமான தருணத்தில், அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் எண்ணற்ற ஆதரவாளர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. ஓம் சாந்தி."
***
ANU/SMB/PKV/AG
(रिलीज़ आईडी: 1991160)
आगंतुक पटल : 141
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam