பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-சவூதி அரேபியா இடையேயான உத்திசார்ந்த கூட்டாண்மையின் எதிர்காலம் குறித்து சவூதி அரேபியாவின் மேன்மைக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத்துடன் பிரதமர் பேசினார்

இரு தலைவர்களும் மேற்காசிய நிலைமை குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர் மற்றும் பயங்கரவாதம், வன்முறை, பொதுமக்களின் உயிர் இழப்பு குறித்த கவலைகளைப் பகிர்ந்து கொண்டனர்

Posted On: 26 DEC 2023 7:48PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, சவூதி அரேபிய மேன்மைக்குரிய இளவரசருமான முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத்துடன்  இந்தியாவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான உத்திசார்ந்த கூட்டாண்மையின் எதிர்காலம் குறித்து பேசினார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"இந்தியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான உத்திசார்ந்த கூட்டாண்மையின் எதிர்காலம் குறித்து எனது சகோதரர் மேன்மைக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத்துடன் ஒரு நல்ல உரையாடலை நடத்தினேன். மேற்காசிய நிலவரம் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம், பயங்கரவாதம், வன்முறை மற்றும் பொதுமக்களின் உயிர் இழப்பு குறித்த கவலைகளைப் பகிர்ந்து கொண்டோம். பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டோம்.

***

(Release ID: 1990568)

ANU/SM/IR/AG/KRS


(Release ID: 1990592) Visitor Counter : 117