பிரதமர் அலுவலகம்
குவைத்தின் புதிய அமீருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
20 DEC 2023 10:22PM by PIB Chennai
குவைத்தின் புதிய அமீராக இன்று பொறுப்பேற்றுள்ள ஷேக் மெஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இந்தியா-குவைத் உறவுகள் வலுவடையும் என்றும், மத்திய கிழக்கு நாட்டில் உள்ள இந்திய சமூகம் செழிக்க இது உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"குவைத் நாட்டின் அமீராகப் பொறுப்பேற்றுள்ள ஷேக் மெஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் ஆண்டுகளில் நமது உறவுகள் மேலும் வலுவடையும் என்றும், இதனால் குவைத்தில் உள்ள இந்திய சமூகம் தொடர்ந்து செழிக்கும் என்றும் நம்புவோம்.”
***
(Release ID: 1988965)
ANU/SMB/IR/RR
(Release ID: 1989037)
Visitor Counter : 82
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam