தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
பிரதமரின் உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு திட்டம்: புகையில்லா சமையலறைகள் கனவை நிறைவேற்றுகிறது
Posted On:
19 DEC 2023 12:49PM by PIB Chennai
நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் போது, பிரதமரின் உஜ்வாலா இலவச சமையல் எரிவாயுத் திட்டத்தின் கீழ் எல்பிஜி சிலிண்டரைப் பெற்ற பிறகு பல பெண்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். சிலர் ஆரோக்கியமற்ற புகையிலிருந்து விடுபடுவதில் மகிழ்ச்சியடைகிறார்கள், சிலர் விறகு சேகரிக்கச் சென்ற நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்துவதை உணர்கின்றனர்.
யாத்திரை தொடங்கிய ஒரு மாதத்தில் சுமார் 3.77 லட்சம் பெண்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். இது 2016-ம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து ஏற்கனவே இந்த்த் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ள கோடிக்கணக்கானவர்களுடன், பதிவு செய்தவர்களையும் சேர்க்கிறது. யாத்திரையின் போது பல பெண்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்களைப் பார்த்தால், பிரதமரின் இலவச சமையல் எரிவாயுத் திட்டம் உண்மையில் கோடிக்கணக்கான பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று உறுதியாக முடிவு செய்யலாம். இதுகுறித்து ஷிமா குமாரி, பச்சன் தேவி ஆகியோர் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் சந்தௌலி மாவட்டத்தைச் சேர்ந்த சீமா குமாரி என்பவர் தனது சமையலறையில் அன்றாடம் சவால்களை எதிர்கொண்டு வந்தார். பல இந்திய வீடுகளைப் போலவே, செல்வி சீமா குமாரியும் பாரம்பரிய சமையல் நடைமுறைகளுக்குக் கட்டுப்பட்டிருந்தார், அவர் ஒவ்வொரு நாளும் விறகு சேகரிக்க வேண்டியிருந்தது. புகை காரணமாக தலைவலியால் அவதிப்பட்டு வந்த அவர், இந்தப் பாரம்பரிய சமையல் முறைகளைப் பின்பற்றி குறிப்பிடத்தக்க சிரமங்களை எதிர்கொண்டார். விறகு கொண்டு சமைப்பதற்கும் கணிசமான நேரம் செலவானது. இந்த இடைவிடாத நடைமுறை கடினமாக இருந்தது, புகையில்லா சமையலறை பற்றிய சிந்தனை அவருக்கு ஒரு தொலைதூர கனவாகத் தோன்றியது.
இருப்பினும், பிரதமரின் இலவச சமையல் எரிவாயுத் திட்டத்தின் மூலம் எல்பிஜி சிலிண்டரைப் பெற்றவுடன், அவரது சமையலறை ஒரு மாற்றத்திற்கு உட்பட்டது, புகையிலிருந்து விடுபட்டது மற்றும் அவரது குடும்பத்திற்கு சிரமமின்றி உணவைத் தயாரிக்க அனுமதித்தது. எல்பிஜி சிலிண்டருடன், அவர் இப்போது உணவை விரைவாக சமைக்க முடிகிறது. சரியான நேரத்தில் மற்றும் சிரமமில்லாத சமையலை உறுதி செய்கிறார். இந்த வசதி அவரது குழந்தைகளுக்கு உணவு தயாரிப்பதை மிகவும் எளிதாக்கியுள்ளது. இந்த விலைமதிப்பற்ற உதவிக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு சீமா மிகுந்த நன்றியைத் தெரிவிக்கிறார். ஏனெனில் இது அவரது வாழ்க்கையைக் கணிசமாக மேம்படுத்தியுள்ளது.
இதேபோல், ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த பச்சன் தேவியும் இதேபோன்ற போராட்டங்களை எதிர்கொண்டார். விறகு சேகரிப்பதும், அவசர அவசரமாக உணவைத் தயாரிப்பதும் அவரது நாட்களைக் குறிக்கின்றன, இது முடிவில்லாததாகத் தோன்றியது. இந்தக் கஷ்டங்களிலிருந்து விடுபட வழி இல்லை என்று திருமதி பச்சன் தேவி நினைத்தபோது. பிரதமரின் இலவச சமையல் எரிவாயுத் திட்டம் அவரது வாழ்க்கையில் எதிர்பாராத நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டரைப் பெறுவது அவரது வாழ்க்கையைச் சிறப்பாக மாற்றியது. விறகு சேகரிக்கும் கடினமான பணியிலிருந்து தன்னை விடுவித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு திருமதி பச்சன் தேவி மிகுந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய வசதி அவரது குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் உணவைச் சமைக்க உதவுகிறது.
பிரதமரின் இலவச சமையல் எரிவாயு திட்டத்திற்கு முந்தைய வாழ்க்கை
பிரதமரின் இலவச சமையல் எரிவாயுத் திட்டத்தின் புரட்சிக்கு முன்பு, கோடிக்கணக்கான குடும்பங்கள் விறகு, நிலக்கரி, மாட்டுச் சாணம் போன்ற பாரம்பரிய சமையல் எரிபொருட்களைப் பயன்படுத்த நிர்பந்திக்கப்பட்டன. இந்தியப் பெண்கள் புகை நிறைந்த சமையலறைகளில் உணவு சமைப்பதும், இருமல், நாள் முழுவதும் சுவாசிக்க சிரமப்படுவதும் வழக்கமாக இருந்து வந்தது. இது அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதித்ததுடன் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் கவலைகளுக்கும் பங்களித்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1988087
***
ANU/PKV/IR/RS/KPG
(Release ID: 1988143)
Visitor Counter : 145
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada