உள்துறை அமைச்சகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலும், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வழிகாட்டுதலிலும், இணையதளப் பாதுகாப்புமிக்க இந்தியாவை உருவாக்குவது உள்துறை அமைச்சகத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது
Posted On:
06 DEC 2023 10:12AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலும், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வழிகாட்டுதலிலும், இணையதளப் பாதுகாப்பு மிக்க இந்தியாவை உருவாக்குவது உள்துறை அமைச்சகத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், இணையதளக் குற்றங்களைத் தடுப்பதற்கும், இணையதளக் குற்றங்கள் தொடர்பான அச்சுறுத்தல்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும் உள்துறை அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. இதுபோன்ற மோசடியாளர்கள் பயன்படுத்தும் தொலைபேசி எண்கள் மற்றும் சமூக ஊடக இணைப்புகளை என்.சி.ஆர்.பி. எனப்படும் குற்ற ஆவணக் காப்பகத்துக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தின் மூலம் உடனடியாகத் தெரிவிக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்
இந்திய இணையதளக் குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் என்பது நாட்டில் நடைபெறும் இணையதளக் குற்றங்களை ஒருங்கிணைந்த மற்றும் விரிவான முறையில் கையாள்வதற்கான உள்துறை அமைச்சகத்தின் முன்முயற்சியாகும். இந்திய இணையதளக் குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம், மோசடிகளில் ஈடுபட்டுள்ள 100 க்கும் அதிகமான வலைத்தளங்களை பகுப்பாய்வுப் பிரிவு மூலம் கடந்த வாரம் அடையாளம் கண்டு பரிந்துரைத்தது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இந்த இணையதளங்களை முடக்கியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இந்த தளங்கள் இயங்கியதும் குறிப்பிட்ட பணிகள் மற்றும் முதலீடுகள் பெறுதல் மூலம் மோசடி செய்யப்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக, 1930 உதவி எண் மற்றும் என்.சி.ஆர்.பி மூலம் பல புகார்கள் பெறப்பட்டன. இந்த மோசடிகள், பொதுவாக, பின்வரும் வகைகளில் அமைகின்றன:-
1. கூகுள், மெட்டா போன்ற தளங்களில் வெளிநாட்டு விளம்பரதாரர்களிடமிருந்து பல மொழிகளில் டிஜிட்டல் விளம்பரங்கள் வருகின்றன. பெரும்பாலும் ஓய்வு பெற்ற ஊழியர்கள், பெண்கள் மற்றும் பகுதிநேர வேலை தேடும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இதன் இலக்காக உள்ளனர்.
2. விளம்பரத்தைக் கிளிக் செய்தவுடன், வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் மூலம் உரையாடல் தொடங்குகிறது. இதன் மூலம் சில பணிகளைச் செய்ய ஒருவரை சம்மதிக்க வைக்கிறார்.
3. பணி முடிந்ததும், பாதிக்கப்பட்டவருக்கு ஆரம்பத்தில் சிறிது பணம் வழங்கப்படுகிறது, மேலும் அதிக வருமானத்தைப் பெற அதிக முதலீடு செய்யுமாறு கோரப்டபடுகிறது.
4. நம்பிக்கையைப் பெற்ற பிறகு, பெரிய தொகையை செலுத்தும்போது, வைப்புத்தொகைகள் முடக்கப்படுகின்றன. இதனால் சம்பந்தப்பட்டவர் ஏமாற்றப்படுகிறார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கீழ்க்கண்டவாறு செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது:-
1. இணையம் மூலம் ஸ்பான்சர் செய்யப்படும் இதுபோன்ற அதிக பணம் ஈட்டும் ஆன்லைன் நிகழ்ச்சிகளில் முதலீடு செய்வதற்கு முன் கவனமாக இருங்கள்.
2. அடையாளம் தெரியாத நபர் வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் மூலம் உங்களைத் தொடர்பு கொண்டால், சரிபார்ப்பு இல்லாமல் நிதி பரிவர்த்தனைகள் செய்வதைத் தவிர்க்கவும்.
3. யுபிஐ பயன்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பெறுநரின் பெயரை சரிபார்க்கவும். பெறுநர் ஏதேனும் சீரற்ற நபராக இருந்தால், அது ஒரு மோசடி கணக்காக இருக்கலாம் மற்றும் நிகழ்ச்சியும் மோசடியாக இருக்கலாம். இதேபோல், ஆரம்ப கமிஷன் எங்கிருந்து பெறப்படுகிறது என்பதை சரிபார்க்கவும்.
4. குடிமக்கள் அடையாளம் தெரியாத கணக்குகளுடன் பரிவர்த்தனைகளைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இவை பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியளிப்பில் கூட ஈடுபடக்கூடும், மேலும் காவல்துறையால் கணக்குகளை முடக்குவதற்கும் பிற சட்ட நடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கும்.
*******
ANU/SMB/PLM/KV
(Release ID: 1983012)
Visitor Counter : 165
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam