பிரதமர் அலுவலகம்
குஜராத்தி புத்தாண்டை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
14 NOV 2023 10:57AM by PIB Chennai
குஜராத்தி புத்தாண்டை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர், "இந்த ஆண்டு ஒரு சிறப்பு ஆண்டாக இருக்கிறது, ஏனெனில் நீங்கள் அனைவரும் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு என்ற இயக்கத்தை மகத்தான வெற்றியாக மாற்றியிருக்கிறீர்கள்.
உள்ளூர் தயாரிப்புகளை வாங்குவதன் மூலம், புத்தாண்டு அதன் புதிய ஒளியைப் பரப்பியுள்ளது.
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வரும் ஆண்டுகளில் அதே உற்சாகத்துடன் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு அளிக்க நாம் அனைவரும் உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:
“உலகம் முழுவதும் புத்தாண்டைக் கொண்டாடும் எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த ஆண்டு ஒரு சிறப்பு ஆண்டாக மாறியுள்ளது, ஏனெனில் நீங்கள் அனைவரும் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு இயக்கத்தை ஒரு மகத்தான வெற்றியாக மாற்றியிருக்கிறீர்கள்.
உள்ளூர் பொருட்களை வாங்குவதன் மூலம், புத்தாண்டு ஒரு புதிய ஒளியைப் பரப்பியுள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வரும் ஆண்டுகளில் அதே உற்சாகத்துடன் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு அளிக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்”.
***
ANU/SMB/BS/KPG
(Release ID: 1976834)
Visitor Counter : 112
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam