பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

எனது மண் எனது தேசம் முன்முயற்சியை ஊக்குவிப்பதில் சம்பந்தப்பட்ட அனைவரின் முயற்சிகளுக்கும் பிரதமர் பாராட்டு


சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகம், எனது மண் எனது தேசம் முன்முயற்சியின் கீழ் எனது மண்ணுடன் சுய புகைப்படம் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்துள்ளது

प्रविष्टि तिथि: 10 NOV 2023 8:10PM by PIB Chennai

எனது மண் எனது தேசம் முன்முயற்சியை ஊக்குவிப்பதில் சம்பந்தப்பட்ட அனைவரின் முயற்சிகளையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகம், எனது மண் எனது தேசம் முன்முயற்சியின் கீழ் எனது மண்ணுடன் சுய புகைப்படம் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்துள்ளது

இந்தப் பிரச்சாரத்தில் 40 பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கும் 7000 கல்லூரிகளைச் சேர்ந்த 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இத்தகைய  பெரும் பங்கேற்பின் காரணமாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டது.

இந்தப் பிரச்சாரம் குறித்து மகாராஷ்டிர முதலமைச்சர் திரு ஏக்நாத் சிண்டேவின் தொடர் எக்ஸ் பதிவுகளுக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“எனது மண் எனது தேசம் #MeriMaatiMeraDesh  முயற்சியில் பங்கேற்று, இயக்கத்திற்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளித்து, ஒரு வகையில் தேசத்திற்கு பெருமை சேர்த்து, ஒற்றுமை உணர்வை ஊக்குவித்த அனைவரையும் நான் பாராட்டுகிறேன்.”

****  

PKV/RB/DL


(रिलीज़ आईडी: 1976469) आगंतुक पटल : 115
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada