பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரு டி.பி.சந்திரே கவுடா மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 07 NOV 2023 11:12AM by PIB Chennai

கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருமான திரு.டி.பி.சந்திரே கவுடா மறைவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"டி.பி.சந்திரே கவுடா அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது. மக்கள் சேவையில் சிறந்து விளங்கிய இவர், கர்நாடகாவில் எம்.பி., எம்.எல்.., மற்றும் அமைச்சராகப் பணியாற்றி, நீண்ட அனுபவம் பெற்று, அழிக்க முடியாத முத்திரையைப் பதித்துள்ளார். நமது அரசியல் அமைப்புச் சட்டம் பற்றிய அவரது ஆழமான புரிதல், சமூக சேவைக்கான அர்ப்பணிப்பு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி."

 

******

 

ANU/SMB/PKV/KPG


(Release ID: 1975306) Visitor Counter : 137