பிரதமர் அலுவலகம்
பூட்டான் மன்னர் மாண்புமிகு திரு ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக்குடன் பிரதமர் சந்திப்பு
Posted On:
06 NOV 2023 11:30PM by PIB Chennai
பூட்டான் மன்னர் மாண்புமிகு திரு ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக்கைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இந்தியாவிற்கு அன்புடன் வரவேற்றார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது:
“பூட்டான் மன்னர் மாண்புமிகு திரு ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக்கை இந்தியாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தனித்துவமான மற்றும் முன்மாதிரியான இந்தியா-பூட்டான் உறவின் பல்வேறு அம்சங்கள் குறித்து நாங்கள் நேர்மறையான விவாதங்களை நடத்தினோம். பூட்டான் மக்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்கான மாமன்னரின் தொலைநோக்குப் பார்வையை மிகவும் மதிக்கிறேன்.”
******
ANU/SMB/BR/KPG
(Release ID: 1975300)
Visitor Counter : 149
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam
,
Malayalam