பிரதமர் அலுவலகம்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை 2023-ல் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்குப் பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
06 NOV 2023 6:23PM by PIB Chennai
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை 2023 போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"இந்தியாவின் மகளிர் சக்தி மீண்டும் சிறப்பாக சாதனை படைத்துள்ளது!
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை 2023-ல் மதிப்புமிக்க தங்கப் பதக்கம் வென்ற நமது நட்சத்திர ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள்! அவர்களின் அசாத்திய திறமை, அசைக்க முடியாத ஆர்வம், இடைவிடாத உறுதி ஆகியவை நம் இதயங்களை பெருமிதத்தால் நிரப்பியுள்ளன.
சர்வதேச அரங்கில் நாட்டின் பெருமையை உயர்த்திய சாம்பியன்களுக்கு வாழ்த்துகள்!”
Release ID: 1975110
***
ANU/AD/PLM/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1975180)
வருகையாளர் எண்ணிக்கை : 184
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam