பிரதமர் அலுவலகம்

ஆசிய பாரா விளையாட்டு 2022 மகளிர் நீளம் தாண்டுதல் டி 47 இறுதிப் போட்டியில் நிமிஷா தங்கப்பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடினார்

Posted On: 25 OCT 2023 7:52PM by PIB Chennai

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் மகளிர் நீளம் தாண்டுதல் டி47 இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நிமிஷாவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

 

"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் நீளம் தாண்டுதல் டி 47 இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நிமிஷாவுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி எங்களுக்குப் பெருமையையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. அவரது அடுத்தடுத்த முயற்சிகளுக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

***

(Release ID: 1971070)

ANU/PKV/SMB/AG/KRS



(Release ID: 1972201) Visitor Counter : 71