பிரதமர் அலுவலகம்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் மகளிர் 1500 மீட்டர்-டி11 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற லலிதா கில்லாகாவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 25 OCT 2023 9:41PM by PIB Chennai

ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் 1500 மீட்டர்-டி11 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற லலிதா கில்லாகாவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது அசாதாரண சாதனையையும் உறுதியையும்  பிரதமர் பாராட்டியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

மகளிர் 1500 மீட்டர் டி11 போட்டியில் லலிதா கில்லாகா வெள்ளிப்பதக்கம் வென்றது இந்தியாவுக்குப் பெருமை அளிக்கிறது.  அவரது அசாதாரணமான செயல்திறனும், உறுதியான அர்ப்பணிப்பும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. அவர் தொடர்ந்து புதிய உயரங்களை எட்டி மேலும் சாதிக்கட்டும்!

---

ANU/SMB/PKV/KPG  

 



(Release ID: 1971439) Visitor Counter : 116