பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவருக்கான எஃப்64 ஈட்டி எறிதல் போட்டியில் சுமித் ஆன்டிலின் தங்கப் பதக்கம் மற்றும் உலக சாதனையைப் பிரதமர் கொண்டாடினார்

இடுகை இடப்பட்ட நாள்: 25 OCT 2023 1:24PM by PIB Chennai

சீனாவின் ஹாங்ஸோ நகரில் நடைபெறும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவருக்கான எஃப்64 ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதற்காகவும், பாரா ஆசிய சாதனை மற்றும் பாரா ஆசிய விளையாட்டு சாதனையை படைத்ததற்காகவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி சுமித் ஆன்டிலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் பதிவில்  பிரதமர்  கூறியிருப்பதாவது:

 

"என்ன ஒரு அற்புதமான சாதனை!

 

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான எஃப்64 ஈட்டி எறிதல் பிரிவில் சுமித் ஆன்டில் தங்கம் வென்று உலக சாதனையும் பாரா ஆசிய சாதனை மற்றும் பாரா ஆசிய விளையாட்டு சாதனையும்  படைத்துள்ளார்.

 

சுமித் ஓர் உண்மையான சாம்பியன்! அவரது அசாதாரண செயல்பாடு, அசைக்க முடியாத உணர்வு மற்றும் திறமைக்கு ஒரு சான்றாகும்.

 

இந்த வெற்றியை இந்தியா பெருமிதத்துடன் கொண்டாடி வருகிறது."

 

*******

(Release ID: 1970696)

 

 

AD/SMB/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1970813) வருகையாளர் எண்ணிக்கை : 133