பிரதமர் அலுவலகம்

2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் 100 மீட்டர் டி12 பிரிவில் சிம்ரன் வட்ஸ் வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு பிரதமர் பாராட்டு

Posted On: 24 OCT 2023 1:10PM by PIB Chennai

சீனாவின் ஹாங்ஸோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் மகளிர் 100 மீட்டர் டி12 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிம்ரன் வட்ஸ்-க்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"மகளிர் 100 மீட்டர் டி12 போட்டியில் சிம்ரன் வட்ஸ் ஒரு அற்புதமான வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்த மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள்.

அவரது அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்கு இந்தச் சிறப்பான செயல்திறன்  ஒரு சான்றாகும்" என்றார்.

***

ANU/AD/PKV/DL



(Release ID: 1970450) Visitor Counter : 60