பிரதமர் அலுவலகம்
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் மகளிர் ஆர்2 10 மீட்டர் ஏர் ரைஃபிள் ஸ்டாண்ட் எஸ்.எச் 1 பிரிவில் அவனி லெகாரா தங்கப் பதக்கம் வென்றதை பிரதமர் கொண்டாடினார்
இடுகை இடப்பட்ட நாள்:
23 OCT 2023 6:27PM by PIB Chennai
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் மகளிர் ஆர்2 10 மீட்டர் ஏர் ரைஃபிள் ஸ்டாண்ட் எஸ்ஹெச்1 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற அவனி லெகாராவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஆர்2 10 மீட்டர் ஏர் ரைஃபிள் ஸ்டாண்ட் எஸ்.எச்1 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற அவனி லெகாராவுக்கு வாழ்த்துகள். அவரது சிறப்பான நம்பமுடியாத திறமையும், உறுதியும் பிரகாசித்துள்ளன. இது நம் நாட்டிற்கு மீண்டும் பெருமை சேர்க்கிறது! இனிவரும் முயற்சிகளுக்கும் வாழ்த்துகள்".
-----
(Release ID: 1970186
ANU/AD/IR/RS/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1970273)
வருகையாளர் எண்ணிக்கை : 144
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu