பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து பிரதமர் கூறிய கருத்துகளின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 21 SEP 2023 12:06PM by PIB Chennai

மதிப்பிற்குரிய மக்களவைத் தலைவர் அவர்களே,

எனக்கு பேச அனுமதியும், நேரமும் கொடுத்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

மதிப்பிற்குரிய மக்களவைத் தலைவர் அவர்களே,

நான் 2-4 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். இந்தியாவின் நாடாளுமன்ற பயணத்தில் நேற்று ஒரு பொன்னான தருணம். இந்த அவையின் அனைத்து உறுப்பினர்களும், அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும், அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கூட அந்த பொன்னான தருணத்திற்கு தகுதியானவர்கள். அவைக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ அவர்கள் அனைவரும் இதற்கு தகுதியானவர்கள். எனவே, இன்று உங்கள் மூலம், இது மிகவும் முக்கியமான முடிவு என்றும், நாட்டின் தாய் சக்திக்கு புதிய ஆற்றலை ஊட்டும் என்றும் நான் கூற விரும்புகிறேன்.

மாநிலங்களவையில் இன்று இறுதிக் கட்டத்தை நிறைவு செய்த பிறகு, நேற்றைய முடிவைத் தொடர்ந்து, இந்த நாட்டின் தாய் சக்தியின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம், உதயமாகும் நம்பிக்கை, நாட்டை புதிய உயரத்திற்கு அழைத்துச் செல்லும். கற்பனைக்கு எட்டாத, ஈடு இணையற்ற சக்தியாக உருவெடுக்கும். என்னால் அதை உணர முடிகிறது. சபையின் தலைவர் என்ற முறையில், இந்த புனிதமான பணிக்காகவும், உங்கள் ஆதரவுக்காகவும், அர்த்தமுள்ள விவாதங்களுக்காகவும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவிக்க நான் இன்று இங்கு நிற்கிறேன்.

வணக்கம்!

---------

ANU/AD/IR/RS/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1970006) வருகையாளர் எண்ணிக்கை : 111