உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'இக்னைட்டிங் கலெக்டிவ் குட்னெஸ்: மன் கி பாத் @ 100' என்ற புதிய புத்தகம், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் நமது தேசம் மேற்கொண்டுள்ள ஒரு தனித்துவமான பயணத்தின் கதையைக் கூறுகிறது: மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா

प्रविष्टि तिथि: 17 OCT 2023 4:31PM by PIB Chennai

புதியதாக வெளியிடப்பட்டுள்ள 'இக்னைட்டிங் கலெக்டிவ் குட்னெஸ்: மன் கி பாத் @ 100'  (Igniting Collective Goodness: Mann Ki Baat @ 100)  என்ற நூல் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நமது தேசம் மேற்கொண்டுள்ள ஒரு தனித்துவமான பயணத்தின் கதையைக் கூறுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறியுளிளார்.

இதுகுறித்து  சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  திரு அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வார்த்தைகளின் அபரிமிதமான சக்தியால், நல்ல விஷயங்களை கொண்ட இலக்குகளை நோக்கி தேசத்தை  எவ்வாறு அணிதிரட்டினார் என்பதை  இந்த நூல் எடுத்துரைப்பதாக கூறியுள்ளார்.

மனதின் குரல் (மன் கி பாத்) 100 வது அத்தியாயம் என்ற மைல் கல்லை கடந்துள்ள நிலையில்,  தரவுகள் மற்றும் ஆழமான கண்ணோட்டங்களைக் கொண்டுள்ள இந்தப் புத்தகம், மாற்றத்திற்கானப் பயணத்தைப் பற்றி சிந்திக்க விரும்பும் இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகமாக அமைந்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார். இந்த தருணத்தில் இந்த சிறந்த நூலை வெளியிட்டுள்ள நூலின் பதிப்பாளருக்கு அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

***

SMB/ANU/PLM/RS/KPG


(रिलीज़ आईडी: 1968496) आगंतुक पटल : 210
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Odia , Kannada , Malayalam