உள்துறை அமைச்சகம்

மேற்கு வங்க மாநிலத்தின் சியால்டாவில், ஸ்ரீராமர் ஆலயத்தைப் போன்று வடிவமைக்கப்பட்ட துர்கா பூஜை பந்தலை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, இன்று திறந்து வைத்தார்

Posted On: 16 OCT 2023 6:52PM by PIB Chennai

மேற்கு வங்க மாநிலம் சியால்டாவில் ஸ்ரீராமர் ஆலயத்தைப் போன்று வடிவமைக்கப்பட்ட துர்கா பூஜை பந்தலை மத்திய உள்துறை அமைச்சர்  திரு அமித் ஷா இன்று (16.10.2023) திறந்து வைத்தார்.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, துர்கா தேவியின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகவே இங்கு வந்துள்ளதாக கூறினார். அன்னை துர்கா எப்போதும் உண்மையைக் காக்கப் போராடியதாகவும், ரக்தபீஜ் முதல் சும்பா-நிசும்பா வரை பல அரக்கர்களை ஒழித்ததாகவும் அவர் கூறினார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அனைத்து பந்தல்களும் (துர்கா தேவி வண்ண அலங்காரப் பந்தல்) பக்தியில் மூழ்கியிருக்கும் இந்த ஒன்பது நாட்களும் மேற்கு வங்க மாநிலத்திற்கு பண்டிகை நாட்கள் என்று திரு அமித்ஷா கூறினார்.

 

 

நவராத்திரியின் போது நாடு முழுவதும் துர்க்கை அம்மன் பல்வேறு வடிவங்களில் வழிபாடு செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். குஜராத்தில், துர்க்கை அம்மனின் மண்டபத்தை அலங்கரித்து வழிபாடு செய்யப்படுகிறது என்றும், நாட்டின் கிழக்குப் பகுதிகளில் துர்கா பூஜை பந்தல்கள் அமைக்கப்பட்டு மக்கள் வணங்குகிறார்கள் எனவும் அவர் கூறினார். வட இந்தியாவிலும் மக்கள் பல சடங்குகள் மூலம் சக்தியை வணங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

 

நாட்டு மக்களின் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்புக்காக அன்னை துர்காவை பிரார்த்தனை செய்ய வந்ததாக திரு அமித் ஷா கூறினார்.

***


(Release ID: 1968205)
SM/ANU/PLM/RS/KRS



(Release ID: 1968226) Visitor Counter : 133