பிரதமர் அலுவலகம்
நவராத்திரியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
ஷைலாபுத்ரி தேவியை பிரதமர் வழிப்பட்டார்
प्रविष्टि तिथि:
15 OCT 2023 8:44AM by PIB Chennai
நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு, அதிர்ஷ்டம், நல்ல ஆரோக்கியம் ஆகியவற்றைக் கொண்டு வர துர்கா தேவியை பிரதமர் பிரார்த்தித்தார்.
மேலும், நவராத்திரியின் முதல் நாளில் அன்னை ஷைலாபுத்ரியின் காலில் விழுந்து வணங்குகிறார். குடிமக்களின் வலிமையையும் செழிப்பையும் அவர் வேண்டியாள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தின் தொடர்ச்சியான பதிவுகளில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது:
“நாட்டு மக்களுக்கு நவராத்திரி நல்வாழ்த்துகள். சக்தி பிரதாயினி அன்னை துர்கா, அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, செழிப்பு, அதிர்ஷ்டம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தை அருளட்டும். அன்னையே போற்றி!"
"நவராத்திரியின் முதல் நாளில், நான் அன்னை ஷைலாபுத்ரியின் பாதங்களை வணங்குகிறேன். நாட்டு மக்களுக்கு வலிமையையும், செழிப்பையும் அருள்புரியட்டும்.”
***
ANU/AD/RB/DL
(रिलीज़ आईडी: 1967839)
आगंतुक पटल : 118
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam