பிரதமர் அலுவலகம்
உத்தராகண்ட் மாநிலத்தில் பார்வதி குண்ட் கோயிலில் பிரதமர் பூஜை செய்தார்
Posted On:
12 OCT 2023 11:52AM by PIB Chennai
உத்தராகண்ட் மாநிலம், பித்தோராகரில் உள்ள பார்வதி குண்ட் கோயிலில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பூஜை நடத்தி தரிசனம் செய்தார்.
ஆதி கைலாய தரிசனம் செய்ய முடிந்ததில் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் அனைவரின் நலனுக்காகவும், மகிழ்ச்சியான வாழ்க்கைக்காகவும் அவர் பிரார்த்தனை செய்தார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகரில் உள்ள புனிதமான பார்வதி குண்ட் கோயிலில் தரிசனம் செய்து, வழிபாடு நடத்தினேன். இங்கிருந்து ஆதி கைலாயத்தை தரிசிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இயற்கையின் மடியில் அமைந்துள்ள ஆன்மீகம் மற்றும் கலாச்சாரம் நிறைந்த இந்த இடத்திலிருந்து, எனது நாட்டின் அனைத்துக் குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்.”
அவர் பார்வதி குண்ட் கோயிலிலிருந்து மேலும் சில காட்சிகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிரதமர் அலுவலகம் சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
"பிரதமர் @narendramodi பிரார்த்தனை செய்து பூஜையில் பங்கேற்ற பார்வதி குண்ட் காட்சிகள்."
***
ANU/SMB/PKV/AG/GK
(Release ID: 1966959)
Visitor Counter : 156
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam