பிரதமர் அலுவலகம்
துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டின் 20 ஆண்டுகள் கொண்டாட்டத்தில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Posted On:
27 SEP 2023 3:27PM by PIB Chennai
மேடையில் அமர்ந்திருக்கும் குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் அவர்களே, பிரபல முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல், நாடாளுமன்றத்தில் எனது சகா திரு. சி.ஆர்.பாட்டீல், குஜராத் அரசின் அமைச்சர்கள், தொழில்துறை உலகின் அனைத்து புகழ்பெற்ற நண்பர்கள், பிற பிரமுகர்கள் மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களே. 20 ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறிய விதையை விதைத்தோம். இன்று அது இவ்வளவு பெரிய, ஆலமரமாக வளர்ந்துள்ளது. துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாட்டின் 20 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நாளில் இன்று உங்களுடன் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
நண்பர்களே,
20 ஆண்டுகள் என்பது ஒரு நீண்ட காலம். 2001-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் குஜராத்தின் நிலைமை இன்றைய தலைமுறை இளைஞர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நிலநடுக்கத்திற்கு முன்பே, குஜராத் நீண்ட காலம் கடுமையான பஞ்சத்தை எதிர்கொண்டது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டு வெளியேறினர். பஞ்சம், நிலநடுக்கம் தவிர, குஜராத்தில் ஒரே நேரத்தில் மற்றொரு பெரிய சம்பவம் நடந்தது. மாதவ்புரா மெர்க்கன்டைல் கூட்டுறவு வங்கி இடிந்து விழுந்ததால் 133 கூட்டுறவு வங்கிகள் பாதிக்கப்பட்டன. ஒட்டுமொத்த குஜராத்தின் பொருளாதார வாழ்க்கையிலும் குழப்பம் ஏற்பட்டது. ஒருவகையில் குஜராத்தின் நிதித் துறை நெருக்கடியில் இருந்தது.
நண்பர்களே,
துடிப்புமிக்க குஜராத்தின் வெற்றியை அதன் வளர்ச்சிப் பயணத்திலிருந்தும் புரிந்து கொள்ளலாம். 2003 ஆம் ஆண்டில் இந்த உச்சிமாநாட்டில் சுமார் 100 பங்கேற்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அது மிகச் சிறிய நிகழ்வு. இன்று இந்த மாநாட்டில் 40,000-க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். 2003 ஆம் ஆண்டில், இந்த உச்சிமாநாட்டில் ஒரு சில நாடுகள் மட்டுமே பங்கேற்றன; இன்று 135 நாடுகள் இதில் பங்கேற்கின்றன . 2003 ஆம் ஆண்டில் இந்த உச்சிமாநாட்டின் தொடக்கத்தில், சுமார் 30 கண்காட்சியாளர்கள் வந்தனர்; இப்போது 2000-க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள் இந்த உச்சிமாநாட்டிற்கு வருகிறார்கள்.
நண்பர்களே,
நாட்டிலேயே வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையில் அதிக முதலீட்டில் குஜராத் முதலிடத்தில் உள்ளது. இன்று, குஜராத்தில் 30,000-க்கும் அதிகமான உணவு பதப்படுத்தும் கூடங்கள் செயல்படுகின்றன.
2047-ம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ந்த மற்றும் தற்சார்பு நாடாக உலகத்தின் முன்வைக்க உதவும் இதுபோன்ற ஒரு செயல்திட்டத்தை இந்தியா உருவாக்க வேண்டிய நேரம் இது. நீங்கள் அனைவரும் நிச்சயமாக இந்த திசையில் பணியாற்றுவீர்கள், தேவையான நடவடிக்கைகளை எடுப்பீர்கள், நிச்சயமாக முன் வருவீர்கள் என்று நான் நம்புகிறேன். எனது வாழ்த்துக்கள்!
***
ANU/SMB/IR/AG
(Release ID: 1965880)
Visitor Counter : 109