பிரதமர் அலுவலகம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற மகளிர் ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனைகளுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
02 OCT 2023 10:54AM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் விரைவு ஸ்கேட்டிங் 3000 மீட்டர் ரிலே பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ரோலர் ஸ்கேட்டிங் வீராங்கனைகள் கார்த்திகா ஜெகதீஸ்வரன், ஹீரல் சாது மற்றும் ஆரத்தி கஸ்தூரி ராஜ் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர்களின் உறுதியையும், குழு ஆற்றலையும் அவர் பாராட்டினார்.
எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“கார்த்திகா ஜெகதீஸ்வரன், ஹீரல் சாது @heeral_sadhu மற்றும் ஆரத்தி கஸ்தூரி ராஜ் @aarathyskating ஆகியோருக்கு வாழ்த்துகள். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் விரைவு ஸ்கேட்டிங் 3000 மீட்டர் ரிலேவில் நமது அசாதாரண மகளிர் விரைவு ஸ்கேட்டிங் ரிலே அணி குறிப்பிடத்தக்க வெண்கலப் பதக்கத்தை வென்றது.
வீராங்கனைகளின் அசைக்க முடியாத உறுதியும், சிறந்த குழு ஆற்றலும் பலருக்கும் உத்வேகம் அளிக்கிறது.”
***
ANU/AP/RB/DL
(रिलीज़ आईडी: 1963156)
आगंतुक पटल : 159
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam