பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற வீராங்கனை பாலக்கிற்கு பிரதமர் திரு.நரேந்திரமோடி வாழ்த்து

प्रविष्टि तिथि: 29 SEP 2023 2:16PM by PIB Chennai

ஹாங்சோவில் நடைபெற்ற 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற பாலக்கிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எக்ஸ்-வலைதள பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

"துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மற்றொரு சிறப்பு தருணம்!

10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் தங்கம் வென்ற பாலக்கிற்கு வாழ்த்துகள். அவரது துல்லியமும் கவனமும் நமது தேசத்திற்கு பெரும் பெருமையைக் கொண்டு வந்துள்ளது. அவரின் அடுத்தடுத்த முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

----

 

ANU/AD/PK\\BS/KPG

 

 


(रिलीज़ आईडी: 1962182) आगंतुक पटल : 141
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , Bengali , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam