பிரதமர் அலுவலகம்
2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 பி பிரிவில் ஆண்கள் அணி தங்கப் பதக்கம் வென்றதை பிரதமர் பாராட்டியுள்ளார்
प्रविष्टि तिथि:
29 SEP 2023 10:09AM by PIB Chennai
ஹாங்சோவில் நடைபெறும் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பி குழு பிரிவில் உலக சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசலே, ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர் மற்றும் அகில் ஷியோரன் ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ்-பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஒரு அற்புதமான வெற்றி, மதிப்புமிக்க தங்கம் மற்றும் ஒரு உலக சாதனை! ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பி குழு பிரிவில் வெற்றி பெற்ற ஸ்வப்னில் குசலே, ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர் மற்றும் அகில் ஷியோரன் ஆகியோருக்கு வாழ்த்துகள். அவர்கள் அசாதாரணமான உறுதியையும் குழு உழைப்பையும் காட்டியுள்ளனர்’’.
-----
ANU/AD/PKV/KPG
(रिलीज़ आईडी: 1961997)
आगंतुक पटल : 160
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu