பிரதமர் அலுவலகம்
துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற ஆடவர் அணிக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
28 SEP 2023 11:05AM by PIB Chennai
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற ஆடவர் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சுடுதல் வீரர்களான சரப்ஜோத் சிங், அர்ஜூன் சிங் சீமா மற்றும் ஷிவா நர்வால் ஆகியோர் தங்கள் துல்லியம் மற்றும் திறமையால் ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர் என்று திரு மோடி கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தின் பதிவில், பிரதமர் தெரிவித்துள்ளதாவது:
“ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் நமது போற்றத்தக்க ஆடவர் அணிக்கு மற்றொரு தங்கம்! சரப்ஜோத் சிங், அர்ஜூன் சிங் சீமா மற்றும் ஷிவா நர்வால் ஆகியோர் தங்கள் துல்லியம் மற்றும் திறமையால் ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டுகளையும், எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
***
ANU/AD/RB/DL
(रिलीज़ आईडी: 1961628)
आगंतुक पटल : 168
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam